முகப்பு
தமிழ்நாடு

வத்திராயிருப்பு அருகே மலைவாழ் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் 

 வத்திராயிருப்பு அருகே உள்ள தாணிப்பாறை ராம்நகர் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு அரிசி காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் வழங்கினர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:04 PM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர்: வத்திராயிருப்பு அருகே உள்ள தாணிப்பாறை ராம்நகர் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு அரிசி காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் வழங்கினர்.

தாணிப்பாறை பகுதியில் உள்ள ராம்நகர், மற்றும் அத்தி கோயில் வெள்ளையாபுரம் காலனி ஆகிய பகுதியில் 80-க்கும் மேற்பட்ட மலை வாழ் குடும்பங்கள் உள்ளன.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் அறிவுரையின் பேரில் இப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்குத் தேவையான அரிசி காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

இதில், நக்சல் பிரிவு காவல் ஆய்வாளர் ஜேசு, சார்பு ஆய்வாளர் அருண்குமார் ஆகியோர் 80-க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்களுக்கு அரிசி காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினர். பின்னர் மாவோயிஸ்ட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.