முகப்பு
தமிழ்நாடு

‘திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் போதுமான அளவு ஆக்சிஜன் இருப்பு’

திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கு பயன்படுத்துவதற்கு தேவையான ஆக்சிஜன் போதுமான அளவு இருப்பில் உள்ளது

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கு பயன்படுத்துவதற்கு தேவையான ஆக்சிஜன் போதுமான அளவு இருப்பில் உள்ளதாகவும், தேவையென்றால் உடனே நிரப்ப நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாய் மூலம் விநியோகம் செய்யும் வசதியுடன் கரோனா சிகிச்சை மையம் 125 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த மையத்தில் 70 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த மருத்துவமனை வளாகத்தில் 6 டன், இரண்டு 1 டன் என 8 டன் கொண்ட ஆக்சிஜன் கொள்கலன் 3 இடங்களில் நிறுவப்பட்டுள்ளது. இதில் 6 டன் கொள்கலனில் 3 நாள்களுக்கு ஒரு முறையும், ஒரு டன் கொள்கலனில் நாள்தோறும் 3 தடவை ஆக்சிஜன் நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை என்பது கிடையாது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.