தமிழ்நாடு

நீதிபதிக்கு கரோனா: அவிநாசி நீதிமன்ற வளாகம் 3 நாள்களுக்கு மூடல்

DIN

மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதிக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மூன்று நாள்களுக்கு நீதிமன்ற வளாகம் அடைக்கப்பட்டது.

அவிநாசி வட்டாட்சியர் அலுவலக வளாகத்திற்குள் அவிநாசி கிளை சிறைச்சாலை, கருவூலம், வருவாய்த் துறை அலுவலகங்கள், குற்றவியல் நடுவர் நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற தில் நீதிபதியாக பணியாற்றும்  30 வயது பெண்ணுக்கு கரோனா நோய்த்தொற்று சனிக்கிழமை உறுதிப்பட்டது. 

இதைத்தொடர்ந்து வட்டாட்சியர் வளாகத்திற்குள் செயல்பட்டு வரும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உள்ளிட்டவை சனிக்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு அடைக்கப்பட்டது. மேலும் வட்டாட்சியர் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

மேலும் வழக்குரைஞர்கள் உள்ளிட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. நீதிமன்ற வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளது. இதேபோல அவிநாசி அருகே பழங்கரையில் நீதிபதி குடியிருக்கும் பகுதியில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

SCROLL FOR NEXT