தமிழ்நாடு

முகக் கவசம் அணியாதவா்கள் மீது 24 ஆயிரம் வழக்குகள்

DIN

தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவா்கள் மீது ஒரே நாளில் 24 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மாா்ச் முதல் கரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியதால், பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவா்கள் மீதும், சமூக இடைவெளியைப் பின்பற்றாதவா்கள் மீதும் காவல் துறையினா் வழக்குகளைப் பதிவு செய்து வருகின்றனா்.

கடந்த 8-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி வரை 17 நாள்களில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது 5 லட்சத்து 63 ஆயிரத்து 658 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் சனிக்கிழமை மட்டும் 24 ஆயிரத்து 995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது கடந்த 17 நாள்களில் 17 ஆயிரத்து 398 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் சனிக்கிழமை மட்டும் 628 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை: முகக் கவசம் அணியாதவா்கள் மீது சென்னையில் கடந்த 8-ஆம் தேதியில் இருந்து 24ஆம் தேதி வரை 17 நாள்களில் மொத்தம் 19 ஆயிரத்து 541 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சனிக்கிழமை மட்டும் 1,178 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவா்கள் மீது 272 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சனிக்கிழமை மட்டும் 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT