ஸ்டெர்லைட்டை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை 
தமிழ்நாடு

ஸ்டெர்லைட்டை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

ஸ்டெர்லைட்டை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

DIN

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியதைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடி சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் கரோனா தொற்று நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவைப்படுவதால் ஆலையில் நான்கு மாதத்திற்கு மட்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை கண்டித்து தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி மகேஷ் உள்ளிட்ட 10 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். 

அப்போது தரையில் அமர்ந்து அனைத்து கட்சிகளிலும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பின்னர் ஆட்சியர் வளாகத்தில் பாதுகாப்புப் பணியிலிருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் 10 பேரை கைது செய்து வாகனத்தில் தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

SCROLL FOR NEXT