தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்கக் கூடாது: இறந்தவர்களின் புகைப்படத்துடன் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

DIN

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் எதிர்ப்பாளர்கள் இறந்தவர்களின் புகைப்படத்துடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த குடும்பத்தினர் மற்றும் ஆலை எதிர்ப்பாளர்கள் 50க்கு மேற்பட்டவர்கள் இருந்தவர்களின் புகைப்படத்துடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.  ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கக்கூடாது என அவர்கள் வலியுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT