தமிழ்நாடு

பிஎம்ஜிகேஏஒய் - 3 திட்டத்தின் கீழ் உணவுத் தானியங்களின் விநியோகம் தொடங்கியது

DIN

பிரதமரின் கல்யாண் கரிப் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் (பிஎம்ஜிகேஏஒய் - 3), உணவு தானியங்கள் சீரிய முறையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகளின் மூலம் வழங்கப்படும் மாதாந்திர உணவுத் தானியங்களுடன் கூடுதலாக 5 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின்படி, தமிழகத்துக்கு 3.28 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மற்றும் 36,470 மெட்ரிக் டன் கோதுமை ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் நாள்தோறும் சராசரியாக 10 ஆயிரம் மெட்ரிக் டன் தானியங்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்குச் சென்றடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மேலும், ஒதுக்கீட்டின்படி மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் தானியங்கள் சென்றடைவது உறுதி செய்யப்படும் என திட்டத்தின் தமிழக பொதுமேலாளா் ஜே.எஸ்.சைஜு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT