மாநிலங்களுக்கு இதுவரை 48.78 கோடி கரோனா தடுப்பூசிகள் விநியோகம்: மத்திய அரசு
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய அரசு 48.78 கோடிக்கும் அதிகமான (48,78,63,410) கரோனா தடுப்பூசி டோஸ்களை மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் இலவசமாக வழங்கியுள்ளது.
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய அரசு 48.78 கோடிக்கும் அதிகமான (48,78,63,410) கரோனா தடுப்பூசி டோஸ்களை மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் இலவசமாக வழங்கியுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான நிலவரப்படி, பல்வேறு வழிகளில் வீணானவை உள்பட மொத்தம் 45,82,60,052 டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சுமாா் 3.14 கோடி (3,14,57,081) தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியாா் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன. மாநிலங்களுக்கு இன்னும் கூடுதலாக 68,57,590 தடுப்பூசிகள் வழங்கப்படவிருக்கின்றன என்று அந்த புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.