தமிழ்நாடு

பெரியபாளையம்: கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து உரிமையாளர்கள் போராட்டம்

பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள  கடைகளை அப்புறப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

DIN

பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற, இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கடைகளை அப்புறப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள  பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலுக்கு செல்வதற்கான பாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகளை அப்புறப்படுத்தக் கோரி, கோயில் பரம்பரை அறங்காவலர் லோகமித்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற   அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கேள்வி எழுப்பி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் ஆகியோர் உதவியுடன், ஆக்கிரமிப்புகளை 2 வாரங்களில் அகற்ற வேண்டும் என இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

பின்னர், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 12-ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார். இந்த நிலையில், இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் சுப்பிரமணி தலைமையில், 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினருடன் 2 ஜேசிபிகள் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஆனால், உரிய தகவல் அளிக்கவில்லை எனக்கூறியும், கடைகளை அப்புறப்படுத்த கால அவகாசம் தரவில்லை எனக்கூறி அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பதற்றம் ஏற்பட்டுள்ளதால் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்துக்கும் மேற்பட்ட யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மளிகை கடை வீடுகளை இடித்து அட்டகாசம்

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச் சட்டம் வருமா? முதல்வர்தான் சொல்லணும் என துரைமுருகன் பதில்

நடிகர் மதன் பாப் காலமானார்

பத்த வச்சுட்டியே பரட்டை... கூலி டிரைலர் இறுதியில் காக்கா சப்தம்!

மனைவி தனது காதலனுடன் பழகி வந்ததாக சந்தேகப்பட்ட கணவன் இரு குழந்தைகளுடன் தற்கொலை!

SCROLL FOR NEXT