வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

வழிபாட்டுத் தலங்களில் வார இறுதி நாள்கள் தரிசனத்திற்குத் தடை

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பொதுமக்களுக்கான தரிசனம் ரத்து

DIN

நாகப்பட்டினம் : நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பொதுமக்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்படுகிறது என நாகை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : 

கரோனா மூன்றாவது அலையைத் தடுக்கும் வகையில், தமிழக அரசின் அறிவுறுத்தலின் பேரில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

இதன்படி, நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாள்களில் பொதுமக்களுக்கான தரிசனம், மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு முற்றிலுமாக தடைவிதிக்கப்படுகிறது. இருப்பினும், மத வழிபாட்டுக் கோட்பாடுகள்படி அனைத்து நிகழ்வுகளும் பக்தர்களின்றி, வழிபாட்டுத் தலப் பணியாளர்கள் மூலம் நடைபெறவும், அதனை ஆன்லைனில் ஒளிபரப்பவும் எவ்வித தடையும் கிடையாது. 

மேலும், ஆடிப் பூரத்தையொட்டி ஆகஸ்ட் 10, 11 ஆகிய தேதிகளிலும் திருக்கோயில்களில் பக்தர்களின் தரிசனத்துக்குத் தடை விதிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நாகை மாவட்டத்தில் உள்ள கடற்கரைகளில் பொதுமக்கள் கூடவும் தடை விதிக்கப்படுகிறது. 

வேளாங்கண்ணி பாத யாத்திரைக்குத் தடை:

அதேபோல, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழாவையொட்டி (ஆக 29-இல் கொடியேற்றம்)  வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருவதற்கும் தடைவிதிக்கப்படுகிறது என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக டிஜிபி சங்கா் ஜிவாலுக்கு இன்று பணி நிறைவு விழா

பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆட்சியரிடம் பாமக மனு

தில்லி பல்கலை.யின் 67 கல்லூரிகளுக்கு மீண்டும் யு-ஸ்பெஷல் பேருந்துகள் சேவை: முதல்வா் ரேகா குப்தா தொடங்கிவைத்தாா்

இளைஞா் கத்தியால் குத்தி கொலை: 4 போ் கைது

SCROLL FOR NEXT