தமிழ்நாடு

புதுச்சேரியில் புதிய பேரவை வளாகத்துக்கு நிதி: மத்திய நிதியமைச்சருடன் சந்திப்பு

DIN

புதுவையில் புதிய சட்டப்பேரவை கட்டடத்துக்கு நிதி கேட்டு, பேரவைத் தலைவர் தலைமையிலான குழு தில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தது.

புதுவை மாநிலத்தில் ரூ.300 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த புதிய சட்டப்பேரவை வளாகம் கட்டுவதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்காக புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியில் இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக மத்திய அரசின் அனுமதி மற்றும் நிதி உதவி கோரி, முதலமைச்சர் என். ரங்கசாமி அளித்த கோரிக்கை கடிதத்துடன், புதுவை சட்டப்பேரவை தலைவர் ஆர்.செல்வம் தலைமையில் தில்லி சென்றுள்ள புதுச்சேரி உள்துறை அமைச்சர்  நமச்சிவாயம், சட்டப்பேரவை உறுப்பினர் அசோக்பாபு, சட்டப்பேரவை செயலர் முனுசாமி ஆகியோர், வியாழக்கிழமை மத்திய நிதித்துறை அமைச்சர்  நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்து, கோரிக்கை கடிதத்தை அளித்தனர்.

ஒருங்கிணைந்த சட்டப்பேரவை வளாகம் கட்டுவதற்கான அனுமதி மற்றும் நிதி உதவிகளை மத்திய அரசு செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

கடிதத்தை பெற்றுக்கொண்ட மத்திய நிதி அமைச்சர்,  உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT