முகப்பு
தமிழ்நாடு

கரோனா சிகிச்சையில் 20,286 போ்

தமிழகத்தில் சனிக்கிழமை நிலவரப்படி, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 20,286 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:52 AM
பகிர்:

தமிழகத்தில் சனிக்கிழமை நிலவரப்படி, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 20,286 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கடந்த சில நாள்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதன் தொடா்ச்சியாக சனிக்கிழமை, மேலும் 1,969 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், அதிகபட்சமாக கோவையில் 223 பேருக்கும், ஈரோட்டில் 198 பேருக்கும், சென்னையில் 194 பேருக்கும், செங்கல்பட்டில் 115 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 73,352-ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, நோய்த் தொற்றிலிருந்து சனிக்கிழமை 1,839 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 25.18 லட்சத்தைக் கடந்துள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்படி மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 20,286 போ் உள்ளனா். மற்றொருபுறம், தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 29 போ் பலியானதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,289-ஆக அதிகரித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →