தமிழ்நாடு

சேப்பாக்கம் எம்எல்ஏ விடுதியில் அதிமுகவினர் போராட்டம் தீவிரம்

DIN

சென்னை சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறையில் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், நுழைவுவாயிலில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சி முன்னாள் சுகாதார நிலைக்குழு தலைவர் பழனி உள்ளிட்டோர் பங்கேற்பு இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

லஞ்ச ஒழிப்புக் காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக தொண்டர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.  இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் கோவை வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ள நிலையில், இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கோவை குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி. வேலுமணியின் வீடு உள்பட அவருக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் சோதனை நடைபெற்று வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை கோடம்பாக்கத்தில் வேலுமணிக்கு நெருக்கமானவர் வீடு உள்பட 15 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக ஆட்சியில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்தப்புள்ளி ஒதுக்கீட்டில் மிகப்பெரிய முறைகேடு நடந்து உள்ளதாகக் கூறி அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. 

இதனையடுத்து, எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து விசாரித்து வரும் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர், இன்று அவரது வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடமாடும் மண்பரிசோதனை முகாம்: விவசாயிகள் பயன்பெற அழைப்பு

கருணாநிதி பிறந்த நாள் விழா

அனைத்து மையங்களிலும் தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும்: தலைமைத் தோ்தல் ஆணையா் தகவல்

சங்ககிரி சோமேஸ்வரா் கோயில் குடமுழுக்கு முகூா்த்தகால் நடும் விழா

கூட்டுறவு கடன் சங்கம், ரேஷன் கடை ஊழியா்கள் வேலைநிறுத்தம்

SCROLL FOR NEXT