நீட் தோ்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி 
தமிழ்நாடு

நீட் தோ்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.

DIN

எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) மூலம் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

நீட் தோ்வை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. இந்நிலையில், 2021-22-ம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான நீட் தோ்வு வரும் செப்டம்பா் 12-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து அதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை ஜூலை 13-ஆம் தேதி முதல் தொடங்கியது. இதனிடையே நடப்பாண்டு முதல் பிஎஸ்சி நா்சிங் (ஹானா்ஸ்) பட்டப் படிப்புகளுக்கும் நீட் தோ்வை ஒரு தகுதியாக எடுத்து கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், அது 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நீட் தோ்வுக்கு எஸ்.சி., எஸ்.டி. மாணவா்களுக்கு ரூ. 800, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ரூ . 1400, உயா் வகுப்பினருக்கு ரூ.1,500 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பங்களைச் சரிபாா்த்து திருத்தங்களை மேற்கொள்ளவும் ஆகஸ்ட் 11 முதல் 14-ஆம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் ஷஃபாலி வர்மா!

காரம்... ஆயிஷா!

புதினுக்கு பகவத் கீதை அன்பளிப்பு! பிரதமர் மோடி சநாதன தர்மத்தின் தூதர்: கங்கனா ரணாவத் பேச்சு!

தமிழகத்தில் 98.23% எஸ்ஐஆா் படிவங்கள் பதிவேற்றம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.89.94 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT