கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் 
தமிழ்நாடு

ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்: முதல்வர் அறிவிப்பு

ராஜேந்திர சோழன் பிறந்தநாள் இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

DIN

ராஜேந்திர சோழன் பிறந்தநாள் இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

வரலாற்றுப் புகழ்பெற்ற சோழ மன்னர் ராஜேந்திர சோழன் கங்கை வரை படையெடுத்துச் சென்று வென்றதன் அடையாளமாக அரியலூர் மாவட்டத்தில் கங்கைகொண்ட சோழபுரம் என்ற நகரை உருவாக்கி, பிரமாண்ட பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்டினார். தமிழர்களின் கட்டிடக்கலையை பறைசாற்றும் வகையில் உலக அளவில் வரலாற்றுப் புகழ்பெற்ற இடமாக இது விளங்குகிறது. 

ராஜேந்திர சோழனை கொண்டாடும் பொருட்டு, அவர் பிறந்த தினமான ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று ஆண்டுதோறும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் பெருவிழா கொண்டாடப்படும். 

இந்நிலையில், ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்தன. கங்கை கொண்ட சோழபுரம் மக்களும், வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் வலியுறுத்தி வந்த நிலையில், தமிழக அரசு இந்த கோரிக்கையை ஏற்று, ஆண்டுதோறும் ராஜேந்திர சோழன் பிறந்த தினமான ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று அவரது பிறந்தநாள் இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

SCROLL FOR NEXT