கோப்புப்படம் 
தமிழ்நாடு

திருச்சியில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் உதவியுடன் திருச்சியில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

DIN

தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் உதவியுடன் திருச்சியில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

நகர்ப்புற மேம்பாடு தொடர்பான முக்கிய அறிவிப்புகள்:

புதிய அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு 1,200 கோடி ரூபாய் ஒதுக்கீடு

கலைஞர் நகரப்புற மேம்பாட்டு திட்டத்திற்கு 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 20,000 கோடி ரூபாய் கடன் வழங்கப்படும்.

நெடுஞ்சாலைத்துறைக்கு 17,899.17 கோடி ரூபாய் ஒதுக்கீடு

சென்னை குமரி இடையே 8 வழிச்சாலை அமைக்கப்படும்.

பாதாள சாக்கடை திட்டத்திற்கு 2,056 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

குடிசை மாற்று திட்டத்திற்கு 3954 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

வீட்டு வசதித்துறையில் உலக வங்கி திட்டத்திற்கு 320.40 கோடி.

வீட்டு வசதித்துறையில் ஆசிய வங்கி திட்டத்திற்கு 171 கோடி.

புதிய பேருந்துகள் வாங்க 623.59 கோடி ஒதுக்கீடு.

மகளிர் இலவச பயணத்திற்கு மானியமாக 703 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

மெட்ரோ 2ஆம் கட்ட பணிகள் 2026ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும்.

நகரங்களில் 30 மீட்டர் இடைவெளியில் மின் கம்பங்கள் அமைக்கப்படும்.

நகராட்சிகளின் மண் சாலைகளின் தரம் உயர்த்தப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருணாச்சலா கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

விஜய் என் தம்பி! அவரைக் கண்டிக்க எனக்கு உரிமையுண்டு: சீமான் விமர்சனம்

இரணியலில் கோழி பண்ணையை அகற்றக் கோரி பாஜக ஆா்ப்பாட்டம்

செல்ஃபி கேர்ள்... ஜான்வி கபூர்!

ராணுவ முகாமில் இருந்து வெளியேறினார் நேபாள முன்னாள் பிரதமர்!

SCROLL FOR NEXT