தமிழ்நாடு

அனைத்து தொகுதிகளிலும் விளையாட்டரங்குகள்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

DIN

அனைத்து தொகுதிகளிலும் விளையாட்டரங்குகள் அமைக்கப்படும் என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டார்.

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அவர், "டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட தமிழ்நாட்டை சேர்ந்த 12 வீரர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக்கு 225.62 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள ஊக்குவிக்கப்படுவார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் விளையாட்டரங்குகளை அமைக்க 3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT