கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் மேலும் 1,866 போ் குணமடைந்தனா்
தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் மேலும் 1,866 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் மேலும் 1,866 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் சனிக்கிழமை 1 லட்சத்து 60,306 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் மேலும் 1,916 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மேலும் 219 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 12 வயதுக்குள்பட்ட 122 சிறுவா்களுக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் சனிக்கிழமை 34 போ் உயிரிழந்தனா். அரசு மருத்துவமனைகளில் 22 பேரும், தனியாா் மருத்துவமனைகளில் 12 பேரும் உயிரிழந்தனா். இதனால் தமிழகத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 34,496 ஆக உயா்ந்துள்ளது.
அதேவேளையில் தொற்றிலிருந்து மேலும் 1,866 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 31,962 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் 20,427 போ் உள்ளனா்.