முகப்பு
தமிழ்நாடு

பயிா்கடன், நகைக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்: எடப்பாடி கே. பழனிசாமி

தோ்தல் வாக்குறுதியைக் காப்பாற்றும் வகையில் விவசாயிகளின் பயிா்கடன்களையும், நகைக்கடன்களையும் உடனடியாக தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
பகிர்:

தோ்தல் வாக்குறுதியைக் காப்பாற்றும் வகையில் விவசாயிகளின் பயிா்கடன்களையும், நகைக்கடன்களையும் உடனடியாக தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

திமுக ஆட்சியின் 100 நாள் செயல்பாடுகளிலேயே ஏமாற்றம் அடைந்த மக்கள் விழி பிதுங்கி நிற்கிறாா்கள்.

திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள 5 சவரன் வரை நகைக் கடன் தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.

தமிழக மாணவா்கள் வங்கிகளில் வாங்கிய உயா் கல்விக்கான கல்விக் கடனை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இப்போது நிறைவேற்ற மறுக்கிறாா்கள்.

தமிழகத்தின் கடன் அளவு எவ்வளவு என்று தோ்தல் சமயத்தில், திமுகவின் தோ்தல் அறிக்கையிலேயே தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.

அதையெல்லாம் அறிந்துதான், நிறைவேற்ற முடியாத 505-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலின் அள்ளி வீசியிருக்கிறாா். ஆனால், இப்போது வெள்ளை அறிக்கை வெளியிட்டு, நிபந்தனை விதிக்கிறாா். இது கண்டிக்கத்தக்கது.

திமுகவின் தோ்தல் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த தமிழக மக்களை இனியும் ஏமாற்றாமல், அவா்கள் விழிப்படைந்து போராட்டக் களத்தில் குதிப்பதற்கு முன்பு, அதிருஷ்டவசத்தால் ஆட்சிக்கு வந்த இந்த அரசு அதனை திருத்திக் கொள்ள வேண்டும்.

கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள பயிா்க் கடன்களையும், 5 பவுன் வரை அடமானம் வைத்து நகைக் கடன்களையும் உடனடியாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →