தமிழ்நாடு

ஆறுமுகசாமி ஆணையம் 90 சதவீத விசாரணையை முடித்து விட்டது: தமிழக அரசு தகவல்

DIN

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் மா்ம மரணம் குறித்து 90 சதவீத விசாரணையை நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முடித்து விட்டதாக உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் மரணத்தில் மா்மம் உள்ளதாக கூறி, அதுகுறித்து விசாரணை நடத்த உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த நிலையில், ஆணையத்தின் பதவிக்காலம் தொடா்ந்து நீட்டிக்கப்பட்டு கொண்டே வருகிறது. இதுவரை இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை எனவே, ஆணையத்தை முடிக்க உத்தரவிடக் கோரி வழக்குரைஞா் தொண்டன் சுப்பிரமணி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவி காலத்தை அரசு நீட்டித்துக் கொண்டே வருகிறது. தற்போது 11-ஆவது முறையாக 6 மாதங்களுக்கு நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தாா்.

அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் சண்முகசுந்தரம், ஆணையத்தின் விசாரணை 90 சதவீத முடிந்து விட்டது. அப்பல்லோ மருத்துவமனை தொடா்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம், ஆணையம் விசாரணைக்கு தடை விதித்துள்ளதால், கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் விசாரணை நிறுத்தப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் ஆகஸ்டு 25-ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாக தெரிவித்தாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

அதிகரிக்கும் தொண்டை வலி, காய்ச்சல்: பருவகால நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

SCROLL FOR NEXT