தமிழ்நாடு

திமுக தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு

DIN

உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படவில்லை எனக் கூறி திமுக தொடா்ந்த அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2017-ஆம் ஆண்டு நவ.17-ஆம் தேதிக்குள் தோ்தல் நடத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையா், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, ஊராட்சி நிா்வாகத் துறைச் செயலாளா் ஆகியோருக்கு எதிராக திமுக சாா்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.எம்.சுப்ரமணியம் ஆகியோா் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, உச்சநீதிமன்ற உத்தரவு படி உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. இதைப் பதிவு செய்த நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT