FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனிதா பெயர்: உதயநிதி வலியுறுத்தல்

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனிதா பெயரை  சூட்டுங்கள் என்று சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் உதயநிதி வலியுறுத்தினார்.

28 ஜனவரி 2024, 9:26 am IST
அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனிதா பெயர்: உதயநிதி வலியுறுத்தல்
பகிர்:

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனிதா பெயரை  சூட்டுங்கள் என்று சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் உதயநிதி வலியுறுத்தினார்.

நீட் தேர்வுக்கு விலக்குக் கோரும் விவகாரம் சட்டப்பேரவையில் இன்று விவாதிக்கப்பட்ட போது, உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், நீட் தேர்வுக்கு கட்சி பேதமின்றி அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கூறியதோடு, மத்திய அரசு மீது எந்தக் காழ்ப்புணர்ச்சியும் இல்லை. மத்திய அரசு எதைச் செய்தாலும் எதிர்க்க மாட்டோம், நல்லதைச் செய்தால் வரவேற்போம் என்று கூறினார்.

மேலும், அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு நீட் தேர்வுக்கு எதிராக போராடிய அனிதா பெயரை  சூட்டுங்கள்  என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.

நீட் தேர்வுக்கு விலக்குக் கோரி தமிழக சட்டப்பேரவையின் நடப்புக் கூட்டத் தொடரிலேயே சட்ட முன்வடிவு கொண்டு வரப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் இன்று நீட் தேர்வு குறித்து பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், நீட் தேர்வுக்கு விலக்குக் கோரி தமிழக சட்டப்பேரவையின் நடப்புக் கூட்டத் தொடரிலேயே சட்ட முன்வடிவு கொண்டு வரப்படும்.

நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய்ந்து, நீதிபதி ஏ.கே. ராஜன் குழு அளித்த அறிக்கையை பரிசீலித்து சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments