முகப்பு
தமிழ்நாடு

தூத்துக்குடியில் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக் கொலை 

தூத்துக்குடி மாவட்டம் அகரம் ஊராட்சி மன்ற தலைவர் சீலன்(35) வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:56 AM
கொலை செய்யப்பட்ட அகரம் ஊராட்சி மன்ற தலைவர் போன் சீலன்
பகிர்:


தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் அகரம் ஊராட்சி மன்ற தலைவர் சீலன்(35) வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி மாவட்டம், அகரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் போன் சீலன் (35). அதிமுகவைச் சேர்ந்த இவர் புதன்கிழமை அந்த பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 

முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. 

மேலும் அண்மையில் நடைபெற்ற தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல தேர்தலில் சேகர் உறுப்பினராக வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கொலை நிகழ்ந்த இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.