ஜி.கே.மூப்பனாரின் 90 ஆவது பிறந்தநாளை ஒட்டி கும்மிடிப்பூண்டி அடுத்த தலையாரிப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 96 மரக்கன்றுகள் நடப்பட்டது. 
தமிழ்நாடு

ஜி.கே.மூப்பனாரின் 90வது பிறந்தநாளை ஒட்டி மரக்கன்றுகள் நடும் விழா

மறைந்த தாமக தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் பொது செயலாளருமான ஜி.கே.மூப்பனாரின் 90 ஆவது பிறந்தநாளை ஒட்டி மரக்கன்றுகள் நடப்பட்டது. 

DIN



கும்மிடிப்பூண்டி: மறைந்த தாமக தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் பொது செயலாளருமான ஜி.கே.மூப்பனாரின் 90 ஆவது பிறந்தநாளை ஒட்டி திருவள்ளூர் வடக்கு மாவட்ட தமாகா சார்பில் கும்மிடிப்பூண்டி அருகே 96 மரக்கன்றுகள் வியாழக்கிழமை நடப்பட்டது.

கும்மிடிப்பூண்டி அடுத்த தலையாரிப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட தமாகா தலைவர் எஸ்.சேகர் தலைமையில் மறைந்த தமாகா தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் பொது செயலாளருமான ஜி.கே.மூப்பனாரின் 90 ஆவது பிறந்தநாளை ஒட்டி 96 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

நிகழ்விற்கு தமாக மாநில செயற்குழ உறுப்பினர் டி.கே.மாரிமுத்து, மாநில அரசியல் விவகார குழு உறுப்பினர் ஆத்தூர் தாஸ், வட்டார தலைவர் என்.ஆர்.கே.தாஸ், ஆர்.அசோகன், மோகன், சிறுபான்மை மாவட்ட தலைவர் சலீம், எஸ்.ரகு, ஜம்பு, தங்கம், காமராஜ், குமரேசன், நைனியப்ன், குமார், மனோகர்,திருமலை, ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து தலையாரிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமாகா மாவட்ட தலைவர் எஸ்.சேகர் 96 மரக்கன்றுகளை நட்டார்.

இதனைத் தொடர்ந்து எளாவூர் பஜாரில் மறைந்த தமாக தலைவர் ஜி.கே.மூப்பனார் பிறந்தநாளை ஒட்டி தமாகா கட்சி கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை, முகக்கவசம், கிருமிநாசினி ஆகியவற்றை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் எஸ்.சேகர் வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25

சென்னை திரைப்பட விழா: பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களுக்கு விருது!

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

ஆந்திரம்: மது வாங்க ரூ.10 கொடுக்க மறுத்த நபரைக் கொன்ற இளைஞர்

SCROLL FOR NEXT