அருணா ஜெகதீசன் ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிப்பு 
தமிழ்நாடு

அருணா ஜெகதீசன் ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையத்தின் கால அவகாசம் 6 மாத காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

DIN

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையத்தின் கால அவகாசம் 6 மாத காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து புதிய ஆட்சி பொறுப்பேற்ற போது, அருணா ஜெகதீசன் ஆணையத்தின் இடைக்கால அறிக்கை கடந்த மே 14ஆம் தேதி  தமிழக முதல்வரிடம் அளிக்கப்பட்டது.

அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையத்தின் கால அவகாசம் ஆகஸ்ட் 22ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், அதனை மேலும் 6 மாதம் நீட்டித்து அதாவது, 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 22 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதான் கடைசி கால அவகாசம். அதற்குள் விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்யவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி வாகனங்களை அரசு முறையாக ஆய்வு செய்கிறதா?

"உங்களுடன் ஸ்டாலின்" முதல்வர் பெயருக்குத் தடையில்லை: உச்சநீதிமன்றம் | செய்திகள் சில வரிகளில்|6.8.25

டெலிவரி ஊழியர்கள் இ-ஸ்கூட்டர் வாங்க ரூ. 20,000 மானியம்!

பாகிஸ்தானில்.. இம்ரான் கானை விடுவிக்கக்கோரி சுதந்திர நாளன்று 2-ம் கட்ட போராட்டம்!

பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலை சிறப்பு ரயில்!

SCROLL FOR NEXT