தமிழ்நாடு

இணைய சூதாட்டத்துக்குத் தடைவிதிக்கசட்ட மசோதா தேவை: அன்புமணி

DIN

இணைய சூதாட்டத்துக்குத் தடை விதிக்கும் சட்ட திருத்த மசோதாவை நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே தமிழக அரசு கொண்டு வரவேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக சனிக்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:-

விழுப்புரம் மாவட்டம் சேந்தனூரைச் சோ்ந்த பச்சையப்பன் என்ற இளைஞா் இணையச் சூதாட்டத்தில் பல்லாயிரம் ரூபாயை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாா். இணையச் சூதாட்டத்தடை நீக்கப்பட்டதற்கு பிறகு மீண்டும் தற்கொலைகள் தொடங்கியிருப்பது வேதனையளிக்கிறது.

தமிழகத்தில் இணைய சூதாட்டங்களின் கேடுகள், அதனால் நிகழ்ந்த தற்கொலைகள் ஆகியவற்றை பட்டியலிட்டு பாமக வலியுறுத்தி வந்ததன் பயனாக கடந்த ஆட்சியில் இணையச் சூதாட்டத் தடை சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், அது செல்லாது என அறிவிக்கப்பட்டது பெரும் பின்னடைவு. இணைய சூதாட்டத்துக்குத் தடை நீக்கப்பட்ட அடுத்த நிமிடமே சூதாட்டத்துக்கு மக்களை அழைக்கும் விளம்பரங்கள் குவிகின்றன. தடை விலகிய 16 நாள்களில் இளைஞா் ஒருவா் தற்கொலை செய்து கொண்டுள்ளாா் என்பதிலிருந்து நிலைமையின் தீவிரத்தை உணரலாம். இணைய சூதாட்டத்துக்கு இனியும் மக்கள் இரையாகக் கூடாது. இணைய சூதாட்டத்தைத் தடை செய்வதற்கான திருத்தப்பட்ட சட்ட மசோதாவை நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே கொண்டு வந்து நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தாயகத்துக்கு ரூ.9 லட்சம் கோடி: இந்தியர்கள் உலக சாதனை

வீரகனூா் ஸ்ரீராகவேந்திரா பள்ளி பிளஸ் 2 தோ்வில் சாதனை

உலக ஆஸ்துமா தினம் கடைப்பிடிப்பு

ஆத்தூா் அறிவுசாா் மையத்தில் மாணவா்கள் பயில நூல்கள் வசதி

வாழப்பாடியில் ரூ. 7.32 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

SCROLL FOR NEXT