தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னையில்?

DIN

சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு சென்னை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு நாமக்கல், கரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 

ஆகஸ்ட் 21ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், சிவகங்கை, மதுரை, புதுச்சோட்டை, தஞ்சை, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிகக் கன மழையும், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், விருதுநகர்,  ராமநாதபுரம், தூத்துக்குடி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும்.

ஆகஸ்ட் 22ஆம் தேதி, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்  அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, தென்காசி, திண்டுக்கல், மதுரை, நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும்.

ஆகஸ்ட் 23ஆம் தேதி, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்  அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், நீலகிரி, கோவை, கரூர், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும்.

ஆகஸ்ட் 24ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்  அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக் கூடும்.

ஆகஸ்ட் 25ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும். அவ்வப்போது கனமழையும் இருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

SCROLL FOR NEXT