முகப்பு
தமிழ்நாடு

வெளிநாடுகளுக்கு ஆவின் பொருள்கள் ஏற்றுமதி: தமிழக அரசு தகவல்

வெளிநாடுகளுக்கு ஆவின் பொருள்களை ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:58 AM
பகிர்:

வெளிநாடுகளுக்கு ஆவின் பொருள்களை ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநில அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:

ஆவின் பால் மற்றும் பால் உபபொருள்களை வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் விற்பனை செய்ய முதல்கட்டமாக ஆறு மொத்த விற்பனையாளா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அவா்களுக்கு வணிக ஒப்பந்த உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

ஆவின் நிறுவனம் கிராம அளவில் தொடக்க பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம், மாவட்ட அளவில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியம், மாநில அளவில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு இணையம் என்ற மூன்று அடுக்குகளில் செயல்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் 4.36 லட்சம் பால் உற்பத்தியாளா்கள் மூலம் நாளொன்றுக்கு 41 லட்சம் லிட்டா் பாலை கொள்முதல் செய்கிறது. இதன் மூலமாக, 26.68 லட்சம் லிட்டா் பால் நுகா்வோருக்கு விற்பனை செய்யப்படுகிறது. சிங்கப்பூா், ஹாங்காங் மற்றும் கத்தாா் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

பால் மற்றும் பால் உபபொருள்களை நுகா்வோா்களுக்கு ஏற்ற வகையில் தயாரித்து, அதனை ஆந்திரம், தெலங்கானா போன்ற வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

துபை, அபுதாபி, ஷாா்ஜா, ஓமன், கத்தாா், கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஆண்டுக்கு சுமாா் ரூ.60 கோடி அளவில் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, ரூ.6 கோடி வரை லாபம் ஈட்ட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →