தமிழ்நாடு

மின் பயன்பாட்டின் மூலமாக வரி ஏய்ப்பினை கண்டுபிடிக்க அமைச்சர் உத்தரவு

DIN

மின் பயன்பாட்டை அளவுகோலாகக் கொண்டு வரி ஏய்ப்பினை கண்டுபிடிக்க வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி தலைமையில் அரசு செயலர், வணிகவரி மற்றும் பதிவுத் துறை, வணிகவரி ஆணையர் மற்றும் வணிகவரி உயர் அலுவலர்கள் கலந்துகொண்ட கூட்டம் நேற்று நடைபெற்றது.

நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் திறம்பட செயல்பட்டு வரிஏய்ப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் அறிவுரை வழங்கினார்.

வரிஏய்ப்பிற்கு உள்ளாகும் பொருட்களாக கண்டறியப்படும் கட்டுமானத்திற்குரிய இரும்புக் கம்பிகள், சிமெண்ட், மின்சாதனப் பொருட்கள் மற்றும் பிளைவுட் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்யும் வணிகர்கள் மீது தனி கவனம் செலுத்தி ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆய்வின்போது உற்பத்தியாளரின் மின்பயன்பாட்டை அளவுகோலாகக் கொண்டு, வரிஏய்ப்பு நடைபெற்றிருக்கிறதா என விஞ்ஞானப்பூர்வமாகவும், சட்டப்படி ஏற்றுக்கொள்ளும் வகையிலும் ஆய்வு செய்து வரிஏய்ப்பைத் தடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT