சைதாப்பேட்டையில் பள்ளி ஆசிரியர்களுக்கான தடுப்பூசி சிறப்பு முகாம் தொடக்கம் 
தமிழ்நாடு

சைதாப்பேட்டையில் பள்ளி ஆசிரியர்களுக்கான தடுப்பூசி சிறப்பு முகாம் தொடக்கம்

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை

DIN

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித் துறை அமைசச்ர் அன்பில் மகேஷ் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.

சைதாப்பேட்டை, சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் இந்த சிறப்பு தடுப்பூசி முகாமில், அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் தங்களது அடையாள அட்டையைக் காண்பித்து, கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. தற்போது கரோனா பரவல் குறைந்து வருவதன் காரணமாக வரும் செப்டம்பா் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன்படி 9 மற்றும் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என்றும், பள்ளிகளுக்கு வரும் ஆசிரியா்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழர் என்பது மட்டும் அல்ல சி. பி. ஆர் எனக்கு நீண்டகால நண்பர். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!-துரைமுருகன்

பூலோக சொர்க்கத்தில்... ஸாரா!

மொட்டை அடித்தது ஏன்? இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம்!

இஸ்ரேல் தாக்குதல்: கத்தார் விரைந்தார் அமீரக அதிபர்!

நேபாளத்தில் 13,000க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்!

SCROLL FOR NEXT