தமிழ்நாடு

கூடலூர்: போலீஸ் விசாரணைக்கு பயந்து சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கூடலூரில் போலீசாரின் விசாரணைக்கு பயந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சிறுவனின் உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தேனி மாவட்டம், கூடலூர் பட்டாளம்மன் கோவிலை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகன் 16 வயது சிறுவன்.  இவன் பக்கத்து வீட்டில் வசிக்கும் 10 வயது சிறுவனை தாக்கியுள்ளான்.

தாக்குதலுக்கு உள்ளான சிறுவன் அழுது கொண்டே தனது தாயாரிடம் தகவலை தெரிவித்துள்ளான். இதுகுறித்து 10 வயது சிறுவனின்  தாயார், 16 வயது சிறுவனிடம், உன்னை  போலீசில் புகார் செய்யப் போகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றாராம்.

இதனால் போலீசாரின் விசாரணைக்கு பயந்துபோன 16 வயது சிறுவன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் மேற்கூரையில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த கூடலூர் தெற்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் முத்துமணி, சார்பு ஆய்வாளர் அல்போன்ஸ் ராஜா ஆகியோர் சிறுவனின் உடலை கைப்பற்றி ஊடற்கூறு  ஆய்வுக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

SCROLL FOR NEXT