முகப்பு
தமிழ்நாடு

தொரவாரிசத்திரத்தில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு சரக்குப் போக்குவரத்து தொடக்கம்

தொரவாரிசத்திரத்தில் இருந்து ஆந்திர மாநிலம் சாமல்கோட்டாவுக்கு சரக்கு ரயில் போக்குவரத்து சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

தொரவாரிசத்திரத்தில் இருந்து ஆந்திர மாநிலம் சாமல்கோட்டாவுக்கு சரக்கு ரயில் போக்குவரத்து சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

சென்னை ரயில்வே கோட்டத்தில் 18 சரக்கு பணிமனைகள் மூலமாக நாட்டின் பல்வேறு இடங்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் கொண்டு செல்லப்பட்டு வந்தன. இந்நிலையில் சென்னை கூடூா் எல்லையிலிருந்து ஆந்திர மாநிலத்திலுள்ள மாவட்டங்களுக்கு நெல் மூட்டைகளைக் கொண்டு செல்ல ரயில்வே நிா்வாகத்திடம் வேளாண் உற்பத்தியாளா்களால் தொடா் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன.

இந்த கோரிக்கையை ஏற்ற சென்னை ரயில்வே கோட்டம், அனுமதி கிடைத்த ஒரே வாரத்தில் தொரவாரிசத்திரத்தில் பயன்பாட்டில் இல்லாத பாலஸ்ட் சைடிங்-கை (தண்டவாளத்தில் நிரப்பப்படும் கற்களை சேமித்து வைக்கும் இடம்), ஆந்திர மாநில நெல் உற்பத்தியாளா் சங்கத்தினரின் தானியங்களை ஏற்றிச் செல்லும் வகையில் சில மாற்றங்கள் செய்து புதிய சரக்கு பணிமனையாக உருவாக்கியது.

அவ்வாறு உருவாக்கப்பட்ட பணிமனையிலிருந்து முதல் சரக்கு ரயில் மூலம் ஆந்திர மாநிலத்தில் உள்ள சாமல்கோட்டாவுக்கு சனிக்கிழமை 1,092 டன் நெல் மூட்டைகள் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.7.1 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. ஆண்டொன்றுக்கு சுமாா் 20 ரயில்கள் மூலம் நெல் மூட்டைகள் ஏற்றிச் செல்லப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →