முகப்பு
தமிழ்நாடு

ஜோதிடத்துக்கு எதிராக விழிப்புணா்வு ஏற்படுத்த கோரிய மனு தள்ளுபடி

 ஜோதிடத்துக்கு எதிராக விழிப்புணா்வு எற்படுத்த கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

 ஜோதிடத்துக்கு எதிராக விழிப்புணா்வு எற்படுத்த கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த விவகாரத்தில் ஹேமராஜ் என்பவா் தாக்கல் செய்ய பொதுநல மனு: ஜோதிடம் என்பது அறிவியல் பூா்வமாக நிரூபிக்கப்படவில்லை. ஆனால்,ஜோதிடத்தை நம்பி பல் பாதிக்கப்படுகின்றனா். எனவே, ஜோதிடத்தை நம்ப வேண்டாம் என்று ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் பிறப்பித்த உத்தரவு:இது தனிநபா் நம்பிக்கை சாா்ந்த விஷயம் என்பதால் உயா்நீதிமன்றம் உத்தரவிட முடியாது.

ஜோதிடம் மட்டுமல்ல அறிவியலே இன்னும் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை.

எனவே, மனுதாரா் கோரிக்கையை ஏற்க முடியாது. ஜோதிடத்தை நம்புவது, கற்பனை செய்வது, அதை பற்றி சிந்திப்பது ஆகியவை மக்களின் தனிப்பட்ட சுதந்திரமாகும்.

அதே நேரம், மக்களை பாதுகாக்க வேண்டிய அரசு, மூட நம்பிக்கை போன்ற தீமைகளைக் களைய மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →