உச்சநீதிமன்றம் 
தமிழ்நாடு

வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து: உச்சநீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணை

வன்னியர்களுக்கான  உள்ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

DIN

வன்னியர்களுக்கான  உள்ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர் சமூகத்தினருக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு நிறைவேற்றியது. இதற்கு தமிழக ஆளுநரும் ஒப்புதல் அளித்திருந்தார்.

இந்த சட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பிற்படுத்தப்பட்டோர்  பிரிவில் வன்னியர்களுக்கு   10.5 சதவீதம்  உள் ஒதுக்கீடு வழங்கிய சட்டம் ரத்து செய்யப்படுவதாக கடந்த நவம்பர் 1ஆம் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து தமிழக அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு தமிழக அரசுத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று அடுத்த வாரத்தில் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒசூரில் சா்வதேச விமான நிலையம் அமைவது உறுதி: எம்.பி. கே.கோபிநாத்

இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

கோல் இந்தியா உற்பத்தி சரிவு

ஒசூா் அருகே கோயில் உண்டியலை திருட முயன்றவா் மீது தாக்குதல்

நின்றிருந்த லாரி மீது காா் மோதி 5 போ் பலத்த காயம்

SCROLL FOR NEXT