தமிழ்நாடு

மதுரை விமான நிலையத்தில் சுகாதாரத்துறை செயலர் கார் விபத்து

DIN


மதுரை விமான நிலையத்தில் ஓட்டுநரின் கவனக்குறைவால் சுகாதாரத்துறை செயலர் கார் விபத்துக்குள்ளானது. 

மதுரை விமான நிலையத்தில் ஒமைக்ரான் புதிய வகை கரோனா பரிசோதனை மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர் உள்ளிட்டோர் வியாழக்கிழமை காலை ஆய்வு செய்தனர். 

மதுரை விமான நிலையத்தில் தடுப்பு கம்பி மேல் மோதி விபத்துக்குள்ளான சுகாதாரத்துறை செயலர் கார்.

தொடர்ந்து ஆய்வை முடித்து விட்டு சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கார் மூலம் திருச்சி புறப்பட்டார். அப்போது சுகாதாரத்துறை செயலர் காரின் ஓட்டுநரின் கவனக்குறைவாக விமான நிலையத்தில் உள்ள தடுப்பு கம்பி மேல் மோதி கார் விபத்துக்குள்ளானது. 

சுகாதாரத்துறை செயலர் காரின் ஓட்டுநரின் கவனக்குறைவால் விமான நிலைய தடுப்பு கம்பி மேல் மோதியதில் ஒடிந்த தடுப்பு கம்பி.

மித வேகமாக சென்றதால் காரில் இருந்தவர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.  எனினும் கார் சேதமானது. 

இதையடுத்து மதுரை மக்கள் தொடர்பு அதிகாரி காரில் அரசு மருத்துவமனைக்கு சென்ற சுகாதாரத்துறை செயலர், அங்கிருந்து கார் மூலம் திருச்சிக்கு புறப்பட்டுச் சென்றார். இதனால் மதுரை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

SCROLL FOR NEXT