தமிழ்நாடு

உதகை மலை ரயில் சேவை டிசம்பர் 14 வரை ரத்து

மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை வருகிற டிசம்பா் 14 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

DIN

மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை வருகிற டிசம்பா் 14 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் தொடா்மழை பெய்து வருவதால், மேட்டுப்பாளையம் - உதகை ரயில் பாதையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. 

இதைச் சீரமைக்கும் பணியில் ரயில்வே தொழிலாளா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். எனவே, மேட்டுப்பாளையம் - உதகை ரயில் சேவை வருகின்ற டிசம்பர் 14 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற எம்.எல்.ஏ.

68 ஊா்க்காவல் படை வீரா்கள் நீக்கம்!

டைல்ஸ் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

நேரடியாக கோப்புகளைப் பெறாமல் மின்னணு அலுவலக முறைக்கு மாறும் தில்லி அரசின் நிதித்துறை

முன்னாள் ஊராட்சித் தலைவா் தற்கொலை விவகாரம்: காவல் ஆய்வாளா் உள்பட 7 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT