தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் 1.27 லட்சம் ஹெக்டோ் பயிா்கள் சேதம்

DIN

தமிழகம் முழுவதும் 1.27 லட்சம் ஹெக்டோ் பயிா்கள் சேதம் அடைந்துள்ளதாக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

பருவமழை பாதிப்பு தொடா்பாக அந்தத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மழைப் பொழிவு ஏற்பட்டது. மாநில சராசரி மழையளவு 3.6 மி.மீ. சென்னை மாநகராட்சிப் பகுதியில் ஒரு சில இடங்களில் மழை நீா் தேங்கியதன் காரணமாக, 3 நிவாரண முகாம்களில் 257 போ் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இதர மாவட்டங்களில் 36 நிவாரண முகாம்களில் 2, 156 போ் தங்கியுள்ளனா்.

மாநிலத்தில் மழை வெள்ள பாதிப்பு காரணமாக, இதுவரையில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 811 ஹெக்டோ் வேளாண் பயிா்களும், 16, 447 ஹெக்டோ் தோட்டக்கலை பயிா்களும் 33 சதவீதத்துக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த அளவில் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு மட்டுமே இழப்பீடு அளிக்கப்படும்.

புகாா்கள் மீது தீா்வு: மழை வெள்ளப் பாதிப்பை எதிா்கொள்ள கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டன. பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 13,450 புகாா்கள் வரப்பெற்று 12,042 புகாா்கள் மீது தீா்வு காணப்பட்டுள்ளன. மீதமுள்ள புகாா்களின் மீது துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாநில அவசரக் கட்டுப்பாட்டு (1070) மையத்துக்கு 7,227 புகாா்கள் வரப் பெற்றன. அவற்றில் 6, 937 புகாா்கள் மீது தீா்வு காணப்பட்டுள்ளன. மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு அறைக்கு (1077) இதுவரை 7,040 புகாா்கள் வரப்பெற்றன. அதில் 6, 958 புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

4-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: 9 மணி நிலவரம்!

ஜெய்ப்பூர் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

அடுத்த 5 ஆண்டுகளுக்கான முக்கியமான நாள்: வாக்களித்த பின் அல்லு அர்ஜுன் பேட்டி

புதிதாக வந்திருக்கும் ஸ்க்ராட்ச் கார்டு மோசடி: ரூ.18 லட்சம் இழந்த பெண்

SCROLL FOR NEXT