தமிழ்நாடு

10 ஆண்டுகளுக்குப் பிறகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்கத்தேரோட்டம்

DIN


திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தங்கத் தேரோட்டம் தொடங்கியது.  

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என்.நேரு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தங்கத்தேரை  வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

சமயபுரம் மாரியம்மன் கோயில் அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

பக்தர்கள் நேர்த்திக்கடனாக தங்க தேர் இழுப்பது வழக்கம்.  கோயில் உள்பிரகாரம் மற்றும் ராஜகோபுரம் இணைக்கும் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்ததால் கடந்த 2011 ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளாக  தங்கத் தேரோட்டம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் இதனையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பாதுகாப்பு  அறையில் வைக்கப்பட்டிருந்த தங்கத் தேரை தூய்மைபடுத்தி மின் விளக்குகள் பொருத்துப் பணிகள் நடைபெற்றது.

பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கத் தேரோட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வெற்றிக்கு தோனி காரணமா? - என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

கியாரே..!

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

SCROLL FOR NEXT