தமிழ்நாடு

நெல்லை சாஃப்டர் பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு

பள்ளிச்சுவர் இடிந்து விபத்துக்குள்ளான நெல்லை சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

DIN

பள்ளிச்சுவர் இடிந்து விபத்துக்குள்ளான நெல்லை சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

திருநெல்வேலி டவுண் பொருள்காட்சித் திடல் அருகேவுள்ள சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியின் கழிவறைச் சுவர் வெள்ளிக்கிழமை காலை இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்து குறித்து அறிந்த ஆட்சியர் விஷ்ணு, திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன், காவல் ஆணையர், தீயணைப்பு துறையினர், கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். 

இந்தச் சம்பவம் தொடா்பாக பள்ளித் தாளாளா் செல்வகுமாா், தலைமையாசிரியா் எஸ்.பி. பொ்சிஸ் ஞானசெல்வி, கட்டுமான ஒப்பந்ததாரா் ஜான்கென்னடி ஆகியோா் மீது திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்துள்ளனர். மேலும், தமிழகம் முழுவதும் பள்ளிகளை ஆய்வு செய்து தரமற்ற கட்டடங்களை இடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில், நெல்லை சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியில் விபத்து நடந்த இடத்தில் அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர், தொடர்ந்து இரண்டாவது நாளாக விபத்து குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கழிவறையின் முன்பக்க சுவரை அஸ்திவாரம் இல்லாமல் கட்டியதே சுவா் இடிந்ததற்கான காரணம் என அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். 

மறு உத்தரவு வரும்வரை சாஃப்டர் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அதுபோல தமிழகம் முழுவதும் பல்வேறு பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாருதி சுஸுகி விற்பனை 3% உயா்வு

இந்தியாவின் மிகப் பெரிய சா்க்கரை தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான இஐடி பாரி வருவாய் 29% உயா்வு

பெரம்பலூா் அருகே வெறிநாய்கள் கடித்து கன்றுக்குட்டி, 4 ஆடுகள் உயிரிழப்பு

ஐடி பங்குகள் அதிகம் விற்பனை: சென்செக்ஸ் சரிவுடன் முடிவு

மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன தாழ்தள சொகுசுப் பேருந்துகள்! அடுத்த வாரத்தில் இயக்க ஏற்பாடு

SCROLL FOR NEXT