சத்தியமங்கலம் வார சந்தையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள், மக்கள். 
தமிழ்நாடு

சத்தியமங்கலம் வார சந்தையை இடமாற்றம் செய்ய வியாபாரிகள், மக்கள் எதிர்ப்பு:  வியாபாரிகள் போராட்டம்

சத்தியமங்கலம் வார சந்தையை இடமாற்றம் செய்ய வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில்,  வியாபாரிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

DIN


சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் வார சந்தையை இடமாற்றம் செய்ய வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில்,  வியாபாரிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை பகுதியில் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த வாரச்சந்தைக்கு சத்தியமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும், கடம்பூர் மலைப்பகுதியில் இருந்தும் பொதுமக்கள் வந்து தங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை வாங்கிச் செல்வது வழக்கம். 

இந்நிலையில், வாரச்சந்தை அருகே செயல்பட்டு வரும் தினசரி காய்கறி மார்க்கெட் நவீன படுத்துவதற்காக வாரச்சந்தையில் இருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை இடத்தை தினசரி காய்கறி மார்க்கெட் உடன் இணைத்து விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும், இதற்காக வாரச்சந்தை இடமாற்றம் செய்ய நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 

இதுகுறித்து தகவலறிந்த வாரச்சந்தை வியாபாரிகள் வாரச்சந்தையை இடமாற்றம் செய்தால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளதோடு சந்தை வளாகத்தில் வியாபாரிகள் 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   

200 ஆண்டுகளாக சத்தியமங்கலம் வாரச்சந்தை இப்பகுதியில் செயல்பட்டு வருகிறது. நகரின் மையப் பகுதியில் உள்ளதால் சத்தியமங்கலம் நகர்ப்பகுதி மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள்  வாரச் சந்தைக்கு வந்து தங்களுக்கு தேவையான பொருள்களை குறைந்த விலைக்கு வாங்கிச் செல்கின்றனர். 

இந்நிலையில், சத்தியமங்கலம் நகராட்சி நிர்வாகம் தினசரி காய்கறி மார்க்கெட்டை விரிவுபடுத்துவதற்காக வாரச்சந்தையை இடமாற்றம் செய்து விட்டு ஏற்கனவே உள்ள தினசரி காய்கறி மார்க்கெட் உடன் இப்பகுதி இணைத்து நவீனப்படுத்தி விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதால் வாரச்சந்தையில் கடை போட்டுள்ள 300 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். எனவே இத்திட்டத்தை கைவிட வேண்டும் என வாரச்சந்தை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாருதி சுஸுகி விற்பனை 3% உயா்வு

இந்தியாவின் மிகப் பெரிய சா்க்கரை தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான இஐடி பாரி வருவாய் 29% உயா்வு

பெரம்பலூா் அருகே வெறிநாய்கள் கடித்து கன்றுக்குட்டி, 4 ஆடுகள் உயிரிழப்பு

ஐடி பங்குகள் அதிகம் விற்பனை: சென்செக்ஸ் சரிவுடன் முடிவு

மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன தாழ்தள சொகுசுப் பேருந்துகள்! அடுத்த வாரத்தில் இயக்க ஏற்பாடு

SCROLL FOR NEXT