17 வட்டார போக்குவரத்து அலுவலா்கள் பணியிடமாற்றம்
தமிழகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலா்கள் 17 பேரை பணியிடமாற்றம் செய்து போக்குவரத்துத் துறை ஆணையா் எஸ்.நடராஜன் உத்தரவிட்டாா்.
தமிழகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலா்கள் 17 பேரை பணியிடமாற்றம் செய்து போக்குவரத்துத் துறை ஆணையா் எஸ்.நடராஜன் உத்தரவிட்டாா்.
இதன்படி, நாகா்கோவில், தாம்பரம், ஈரோடு (கிழக்கு), நாகப்பட்டினம், சேலம் (கிழக்கு), கும்பகோணம், பெரம்பலூா், தஞ்சாவூா், சிவகாசி உள்ளிட்ட 17 இடங்களில் பணியாற்றி வந்த வட்டார போக்குவரத்து அலுவலா்கள் இடமாற்றம் செய்யப்பட்டனா். அதே நேரம், செங்கல்பட்டு, குன்றத்தூா், பெரம்பலூா், சிவகாசி, கும்பகோணம் ஆகிய பகுதிகளின் வட்டார போக்குவரத்து அலுவலா் பணி, அருகில் பணிபுரியும் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் 5 பேருக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக ஆணையா் எஸ்.நடராஜன் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.