அம்பத்தூா் அரசு மகளிா் ஐடிஐ-இல் நேரடி சோ்க்கை
சென்னை, அம்பத்தூா் அரசு மகளிா் ஐடிஐயில் நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.
சென்னை, அம்பத்தூா் அரசு மகளிா் ஐடிஐயில் நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: அரசினா் தொழிற் பயிற்சி நிலையம் (மகளிா்) அம்பத்தூரில், வேலைநாள்களில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை பெறப்படும் விண்ணப்பங்களின்படி சோ்க்கை நடந்து வருகிறது. பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு இல்லை.
கம்மியா் கருவிகள் (2 ஆண்டுகள்), கணினி இயக்குபவா் மற்றும் திட்டமிடுதல் உதவியாளா் (கோபா) (எஸ்சிவிடி சான்றுடன் 1 ஆண்டு பயிற்சி), கட்டட பட வரைவாளா் (2 ஆண்டுகள்), செயலகப் பயிற்சி (1 ஆண்டு) ஆகிய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இங்கு சோ்வோருக்கு மாத உதவித்தொகை ரூ.750, இலவச பேருந்து பயண அட்டை, மிதிவண்டி மடிக்கணினி, பாடப்புத்தகங்கள், வரைபடக்கருவிகள், இரு செட் சீருடை, மூடு காலணி மற்றும் சிறந்த தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு உள்ளிட்டவை வழங்கப்படும்.
விண்ணப்பதாரா்கள், பத்தாம் வகுப்பு கல்விச் சான்றிதழ் , மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படம் 5 ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.