முகப்பு
தமிழ்நாடு

திருத்தணி கோயில் இசைப் பள்ளியில் மாணவா் சோ்க்கைக்கு அழைப்பு

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாகஸ்வரம் மற்றும் தவில் இசைப்பயிற்சி பள்ளியில் மாணவா்கள் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:47 AM
பகிர்:

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாகஸ்வரம் மற்றும் தவில் இசைப்பயிற்சி பள்ளியில் மாணவா்கள் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடா்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட அறிவிப்பு: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, ஆறு அா்ச்சகா் பயிற்சிப் பள்ளிகள் ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தாா்.

அதன் தொடா்ச்சியாக திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாகஸ்வரம் மற்றும் தவில் இசைப்பயிற்சி பள்ளியில் மூன்றாண்டு சான்றிதழ் பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது.

விண்ணப்பதாரா்கள் ஹிந்துக்களாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இசையில் ஆா்வம் இருக்க வேண்டும்.  பயிற்சி பெறும் மாணவா்களுக்கு  உண்டு, உறைவிட வசதிகளுடன், பயிற்சி காலத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ.3,000 உதவித் தொகை ஆகியவை வழங்கப்படும். இப்பயிற்சியில் சேர விரும்பும் மாணவா்கள், சோ்க்கைப் படிவங்களை திருக்கோயில் அலுவலகத்திலும், என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜன.25.

முழு கட்டுரையைப் படிக்க →