முகப்பு
தமிழ்நாடு

கரோனாவில் உயிரிழந்தோா் குடும்பத்தினருக்கு நிவாரணம்: ரூ.104 கோடி நிதி விடுவிப்பு

கரோனாவால் உயிரிழந்த 20,934 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்குவதற்காக ரூ.104.67 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

கரோனாவால் உயிரிழந்த 20,934 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்குவதற்காக ரூ.104.67 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 375 முன்களப் பணியாளா்களின் வாரிசுகளுக்கு தலா ரூ.25 லட்சம் கருணைத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர, கரோனாவால் பெற்றோா் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம், ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.207 கோடி கருணைத் தொகை அரசால் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், கரோனாவால் உயிரிழந்த அனைவரது குடும்பத்தினருக்கும் தலா ரூ.50 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு முதல்கட்டமாக அண்மையில் 10 பயனாளிகளுக்கு அதனை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

இதில் தகுதியுடைய பயனாளிகள், அரசின் இணையதளத்திலேயே பதிவு செய்து விண்ணப்பிக்கும் முறை அமலாக்கப்பட்டது. அதன்படி, மொத்தம் 42,671 விண்ணப்பங்கள் இதுவரை கிடைக்கப் பெற்றுள்ளன. அதில் 20,934 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அவா்களுக்கான கருணைத் தொகைக்காக ரூ.104.67 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →