சிறப்பு முகாம்: 17.31 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (டிச.26) கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் 17.31 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (டிச.26) கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் 17.31 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
16-ஆவது கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் மொத்தம் 17.31 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.