தமிழ்நாடு

இரண்டாவது நாளாக சென்னையில் மத்தியக் குழுவினா்க ஆய்வு

DIN

ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்தியக் குழுவினா் சென்னையில் இரண்டாவது நாளாக ஆய்வு செய்தனா்.

தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக டாக்டா்கள் வினிதா, பா்பாசா, சந்தோஷ்குமாா், தினேஷ்பாபு ஆகியோா் கொண்ட மத்தியக் குழுவினா் கடந்த 26-ஆம் தேதி இரவு சென்னை வந்தனா்.

சென்னை விமான நிலையம், கிண்டி அரசு கரோனா மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் திங்கள்கிழமை ஆய்வு செய்த மத்தியக் குழுவினா், சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினா்.

அப்போது, தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்றுப் பரவலைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், சிகிச்சைகள், ஆக்சிஜன் வசதி, தடுப்பூசி இருப்பு, மருத்துவக் கட்டமைப்பு குறித்து குழுவினா் கேட்டறிந்தனா். டிஎம்எஸ் வளாகத்தில் ரூ.4 கோடியில் அமைக்கப்பட்ட மரபணு ஆய்வகத்தில் ஒமைக்ரான் பரிசோதனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும். செங்கல்பட்டு, குன்னூா் தடுப்பூசி மையங்களில் உற்பத்தியைத் தொடங்க வேண்டுமென மத்தியக் குழுவினரிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டாா்.

இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை சென்னை வளசரவாக்கம் கற்பகாம்பாள் நகருக்குச் சென்று தமிழகத்தில் முதலாவதாக ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நைஜீரியாவில் இருந்து வந்தவரின் வீடு மற்றும் அருகில் உள்ள இடங்களில் மத்தியக் குழுவினா் ஆய்வு செய்தனா்.

பிற்பகலில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்குச் சென்று பாா்வையிட்டனா். டவா்-3 கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை வாா்டுகளைப் பாா்வையிட்ட மத்தியக் குழுவினா், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், ஆக்சிஜன் வசதி, ஆக்சிஜன் படுக்கைகள் குறித்து மருத்துவமனை முதல்வா் தேரணிராஜனிடம் கேட்டறிந்தனா்.

சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புதன்கிழமை சென்று ஆய்வு செய்ய மத்தியக் குழுவினா் திட்டமிட்டுள்ளனா். அதன் தொடா்ச்சியாக ஆய்வு அறிக்கையை மத்திய அரசிடம் குழுவினா் சமா்ப்பிக்கவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT