தமிழ்நாடு

சென்னையில் அதிகரிக்கும் கரோனா: தயார் நிலையில் 800 படுக்கைகள்

சென்னையில் கரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 800 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

DIN


சென்னையில் கரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 800 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகர ஆணைய ககன்தீப் சிங் பேடி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, சென்னையில் 3 இடங்களில் தற்காலிக படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 800 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் நீண்ட நாள்களுக்குப் பிறகு தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஒமைக்ரான் பாதித்த 45 பேருமே இரண்டு தவணை கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் தான். அதனால் அவர்களுக்கு பாதிப்பு குறைவாக உள்ளது.

இரவு நேர ஊரடங்கு, பள்ளிகள் திறப்பில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்து டிசம்பர் 31-ஆம்தேதிக்குள் தெரியவரும் எனக் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹோட்டல் வருவாய் ரூ.50; ஆனால், ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.15 லட்சம்! கங்கனா ஆதங்கம்!

முதல்வராக்கிய சசிகலாவை சந்திக்க தைரியம் இருக்கிறதா? - பழனிசாமிக்கு தினகரன் சவால்!

அரசனாக மோகன் லால்! விருஷபா படத்தின் டீசர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

கடைசி டி20: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நமீபியா ஆறுதல் வெற்றி!

SCROLL FOR NEXT