தமிழ்நாடு

சீர்காழியில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலக  முன்பு ஊராட்சி மன்ற தலைவர்கள் அதிகாரத்தையும், உரிமையையும் பறிக்கும் சீர்காழி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தைக் கண்டித்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்புத் தலைவர் அகோரம் தலைமை வகித்தார். நெப்பதூர் ஊராட்சி மன்ற தலைவர் மரகதம் அகோரமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள் அஞ்சம்மாள், மதியழகன், தாமரைச்செல்வி திருமாறன், தனலட்சுமி அன்பழகன், அலெக்சாண்டர் முன்னிலை வகித்தனர் ஆகியோர்  செம்மங்குடி ஊராட்சி மன்ற தலைவர் அசோகன் வரவேற்று பேசினார்.  

ஆர்ப்பாட்டத்தின் போது  மத்திய அரசின் 15வது நிதி மானிய குழு அந்தந்த ஊராட்சிகளுக்கு 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வழங்கப்பட்டு வருகிறது. இதனை தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். மத்திய அரசின் 15வது மானிய நிதியை கிராம ஊராட்சியின் வளர்ச்சியை தவிர வேறு எந்த திட்டத்திற்கும் ஊராட்சி மன்றத் தலைவரின் அனுமதியின்றி வேறு யாரும் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை இன்றைய மக்கள் தொகை அடிப்படையில் அனைத்து ஊராட்சிகளுக்கும் பாரபட்சமின்றி வழங்க வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு ஊதியத்தை தனியாக நிதி ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும்.

ஊராட்சிமன்ற செயலர்கள் ஊராட்சி மன்ற தலைவரின் அனுமதி மற்றும் ஆலோசனை இல்லாமல் புதிய செயலர்கள் பணிநியமனம் பணியிட மாறுதல் செய்ய கூடாது. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குனர்களை பணி நிரந்தரமாக்கி அவர்களுக்கு தனி ஊதியம் வழங்க வேண்டும். கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டிய போதிய சரியான நிதியை சில ஊராட்சிகளுக்கு திட்டமிட்டு வழங்கப்படாமல் தடுக்கப்பட்டு வருகிறது.

இந்த போக்கை நீக்க வேண்டும். கடந்த ஒன்றரை வருடங்களாக கரோனா மருத்துவ தடுப்பு நடவடிக்கை மற்றும் தடுப்பு முகாம் மற்ற செலவுகள் அனைத்தையும் கிராம ஊராட்சி கணக்கு எண் ஒன்றில் இருந்து செய்து வருகிறோம். அரசு இதுவரை எந்த நிதியையும் எந்த ஊராட்சிக்கும் வழங்கப்படவில்லை. எனவே கரோனா தடுப்பு நடவடிக்கை என்று தனியாக நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும்.

அரசு வழிகாட்டுதல் நெறிமுறையின் அடிப்படையில் பணித்தள பொறுப்பாளர்களை பணி நியமனம் செய்ய வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன உரையாற்றினர்.

ஊராட்சி மன்ற தலைவர்கள் மாலினி முருகன், தட்சிணாமூர்த்தி, விஜயன் ,  ஒவ்வொரு ஊராட்சி  நூறு நாள் பணியாளர்கள், பொதுமக்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

குட்காவை பதுக்கி விற்பனை செய்த மளிகைக் கடைக்காரா் கைது

அமெரிக்கா யார் பக்கம்?

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 - 6.5% தான், 8 - 8.5% அல்ல! -ரகுராம் ராஜன்

7 நக்சல்கள் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT