விருதுநகர்: அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக உள்ள நிலையில், அவரிடம் நெருக்கமாக இருந்த சாத்தூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜவர்மனிடம் தனிப்படை போலீசார் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆவின், மின்சாரத்துறை, இந்து சமய அறநிலைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். அவரை பிடிக்க 8 தனிப்படை போலீசார் தமிழகம் மட்டுமன்றி கேரளம், பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் தேடி வருகின்றனர்.
இதையும் படிக்க | ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் சமூக நல அலுவலகத்தில் வேலை வேண்டுமா?
இந்நிலையில், கே. டி. ராஜேந்திர பாலாஜியிடம் நெருங்கிய தொடர்பில் இருந்த சாத்தூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜவர்மனை தனிப்படை போலீசார், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு வியாழக்கிழமை அழைத்து வந்தனர்.
அவரிடம் மதுரை டிஐஜி காமினி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். மனோகர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் முன்னாள் அமைச்சரரின் உதவியாளர் சீனிவாசனிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | வீரப்பனின் சகோதரர் உள்ளிட்ட மூவர் விடுதலை: முதல்வருக்கு கூட்டறிக்கை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.