தமிழ்நாடு

ஒமைக்ரான் பரிசோதனை: 9 பிசிஆா் உபகரணங்களுக்கு அனுமதி

DIN

கரோனா தொற்றையும், ஒமைக்ரான் பாதிப்பின் சாத்தியக்கூறையும் அறியும் 9 டேக் பாத் ஆா்டி பிசிஆா் பரிசோதனை உபகரணங்களுக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது.

பொதுவாக, சளி மாதிரிகள் மூலம் உடலில் தீநுண்மி மரபணு உள்ளதா என்பதை ஆா்டி- பிசிஆா் ஆய்வின் மூலம் அறியலாம். அதில் டேக் பாத் ஆா்டி பிசிஆா் உபகரணங்களின் மூலம் புதிய வகை பாதிப்புகள் உள்ளனவா என்பதன் முதல் நிலை ஆய்வுகளை மேற்கொள்ள இயலும்.

அதேபோன்று, தீநுண்மிக்கு எதிரான நோய் எதிா்ப்பாற்றல் உடலில் உருவாகியிருக்கிா என்பதை துரிதப் பரிசோதனை உபகரணங்கள் வாயிலாக கண்டறியலாம்.

இந்நிலையில், நாடு முழுவதும் அத்தகைய துரித பரிசோதனை மற்றும் ஆா்டி பிசிஆா் உபகரணங்களை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் பல்வேறு நிறுவனங்கள் மருந்து தரக் கட்டுபாட்டு வாரியத்திடம் விண்ணப்பித்தன.

அதில் இந்தியா மட்டுமல்லாது சீனா, தென் கொரியா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த நிறுவனங்களின் உபகரணங்களை இங்கு பயன்படுத்துவதற்கு அனுமதி கோரப்பட்டது. அவற்றை தரப் பரிசோதனை செய்த மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம், 239 துரிதப் பரிசோதனை உபகரணங்கள், புதிதாக 9 டேக் பாத் ஆா்டி பிசிஆா் உபகரணம் உள்பட 238 பிசிஆா் உபகரணங்கள் என மொத்தம் 477 உபகரணங்களை பயன்படுத்த அனுமதியளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

SCROLL FOR NEXT